Thursday, April 18, 2013

P B ஸ்ரீனிவாஸ் – அஞ்சலி
தனது கம்பீரக்குரலாலே சில பல தலைமுறைகளை தன் பக்கம் ஈர்த்த இன்னுமொரு ஜாம்பவான் தவறிட்டாரு.இவர் பாட்டுகள் எனக்கு ஏன் பிடிக்கும்னு தெரியல, ஆனா பிடிக்கும். இத்தனைக்கும் இவர் பல பாடல்கள் பாடியது நான் பிறக்க முன் காதல் மன்னன் ஜெமினி கணேசன் படங்களுக்கு. ஒருவேள (அப்பா) பெயர் கூடக் காரணமா இருந்திருக்கலாம். எங்கப்பாவுக்கு இவர் பாட்டுப் புடிக்குமான்னு தெரியல. அப்பா தன்னோட எந்த ஆசைகளையும் வெளியே சொன்னது கிடையாது. அம்மா அவர் பற்றிய எல்லாத்தையும் குற சொல்லிட்டே இருந்தனால அப்படியான்னும் தெரியல. கடைசிவரை தனக்குப் பிடிச்ச எந்த விஷயமும் எங்களுக்குத் தெரியப் படுத்தவே இல்ல.
ஜெமினி கணேசனின் சில படங்களைச் சிறுவயதில் பார்த்திருந்தாலும் அதில் இடம்பெற்ற பாடல்கள் என்னை ஈர்த்தது 90 களில் தொழில் சார்பாக ஊர் ஊராக இடம்பெயர்கையில்தான். அக்காலகட்டங்களில் தனிமைக்குத் துணை டேப் ரெக்கார்டர்தான். இரவின் நிசப்தத்தில் பழைய பாடல்கள் கேட்பது ரொம்பவும் ரம்யமான அனுபவம். அதிலும் PBS பாட்டுக்கள் சோர்ந்த உள்ளத்தை ஒத்தடம் கொடுத்து தூங்க வைக்கவல்லவை. பிற்காலத்தில் தொழில்நுட்பம் முன்னேற எல்லாப்பாடல்களையுமே DVD களில் சேமிக்கும் வாய்ப்பு அமைந்தது. மடிக்கணினியில் சேமிக்கப்பட்டு சலித்த வேளைகளில் இன்றும் தமது பணியைத் தொடர்வது இவற்றின் சிறப்பு. ஆனா ஏனோ இவர ராஜாவும் ரகுமானும் இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாமேன்ற வருத்தம் எனக்கு இருக்கு. அவர் மறைந்தாலும் அவர் பாடல்கள் என்றென்றும் நம் நெஞ்சை விட்டு நீங்கா வல்லமை உடையவை. உதாரணத்துக்கு

“ஏழை மனதை மாளிகையாக்கி இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு”

அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

4 comments:

 1. என்றும் பலரின் மனதில் இனிமையான பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான், அவர் ரசிகர்களின் மனதில் என்றும் வாழ்கிறார்.

   Delete

 2. உங்களுக்குப் பாட வருமா. ?பல வருஷங்களுக்கு முன் நண்பர் எங்கள் வீட்டுக்கு வந்து பல பாடல்களைப் பாடினார். அத்தனையும் இன்னும் டேப்பில் பத்திரமாக வைத்திருக்கிறேன். வாழ்த்துக்கள். சமையல் எல்லாம் எப்படி இருக்கிறது.?

  ReplyDelete
  Replies
  1. பாட வரும், ஆனா எதிர்ல நின்னு கேக்க முடியுமான்னு தெரியல. 8ம் வகுப்புவரை கடவுள் வாழ்த்து, தேவாரம் எல்லாம் என்னைத்தான் பாடச்சொல்வார்கள். பின்னர் குரல் உடைந்ததுடன் என் பாடும் ஆர்வமும் உடைந்தது. டேப்பில் உள்ளதை DVD க்கு மாற்றினால் நாங்களும் பயன் பெறலாமே? சமையல் சுவாரஸ்யமாகச் செல்கிறது. வேலைப்பளு காரணமாக எழுத முடியவில்லை.

   Delete