Saturday, July 27, 2013

உதவி உபத்திரவமான கதை


என் கல்லூரித் தோழன் தொலைபேசியில் அழைத்தான். அவன் பணியிட நண்பரொருவருக்கு ஓட்டுனர் தேவையிருந்தது. நான் என்னைத் தினமும் அலுவலகம் கொண்டு வரும் சகாவிடம் இதுபற்றிக்கூற, அவன் தனது கூட்டாளியொருவனை இதற்குப் பரிந்துரைத்தான். ஒருவழியாக நேர்முகத்தேர்வு முடிந்து பணியும் உறுதியானது. சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு எடுத்துவிடுவதனால் நண்பர் தோழனை அழைக்க, அவர் என்னைத் தொடர்பு கொள்ள, நான் சகாவின் காதுக்கு விஷயத்தைக் கொண்டு போக, அது அவர் கூட்டாளிக்குச் சென்று, பின்னர் மறுபடியும் சென்ற வழியே திரும்பிப் பயணிக்கிறது. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் சம்பந்தமேயில்லாமல் நாங்கள் மூன்றுபேர் கிடந்து அல்லாடுகிறோம். உதவி எப்படி உபத்திரவமாவதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இல்லை. 

3 comments:

  1. அன்பின் உமேஷ் முதல் முறையே கருத்துப் பெட்டிக் கண் திறந்துவிட்டது.ஒருவரைச் சார்ந்து ஒருவர் சென்றதால் சொல்லக் கடமைப் பட்டதாக அனைவருமே நினைப்பதால் உதை உபத்திரவம் ஆகிறது.

    ReplyDelete
  2. புதிய template கண்ணைக்கவர்ந்தாலும் பின்னூட்டங்கள் எனக்கே சில நேரங்களில் தெரிவதில்லை. மீண்டும் பழைய,பழகிய templateக்கு மாற்றி விட்டேன். கருத்துப்பதிவுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  3. கூகிள் பிளஸ் கருத்துரைப்பெட்டி :

    1. G+ profile இல்லாத எவரும் கருத்து இடம் முடியாது (openID, Anonymous வசதிகள் இல்லை)

    2. அனைத்து comment களும் blog owner ஆல் கட்டு படுத்த முடியாது.

    3. blogger dashboard இல் Comment எண்ணிக்கை 0 என காட்டுகிறது.

    இன்னும் பல முக்கியமான பிரச்சனைகளை அறிய கீழ் உள்ள எனது நண்பர் தளத்தில் அறியவும்...

    http://www.tamilcc.com/2013/04/google-comments-box.html

    மற்றுமொரு இனிய நண்பர் அவசரப்பட்டு மாறினார்... அதனால் என்ன நடந்தது என்பதை அறிய இங்கு செல்லவும்... கருத்துரைகளை வாசிக்கவும்...

    http://kaviyazhi.blogspot.in/2013/04/blog-post_20.html

    உடனே மாற வேண்டாம் என்பதே இத்தகவலின் நோக்கம்… நன்றி...

    ReplyDelete