Wednesday, January 31, 2024

ஆசை தோசை அப்பளம் வடை

வழக்கமாக டிபன் உண்ணும் இடத்தில் உள்ள தமிழ்த் தம்பி இன்று பேசினார். வாய்க்கு ருசியாக முட்டை தோசை வார்த்துக் கொடுப்பதில் கில்லாடி. தனக்குக் கல்யாணமாம். ஊருக்குப் போகிறாராம். ஊரில் பெரிதாக படிப்பறிவு இல்லாத கிராமத்துப் பெண், உறவு முறையில் அமைந்த சம்பந்தம். மிக்க மகிழ்ச்சி என்று சிறு அன்பளிப்பு தந்த போது தம்பி கண்களில் பிரகாசம். அவருக்காவது ' மாமா, மாமா ' என்று வாஞ்சையோடு சுற்றி வந்து பணிவிடை செய்ய நல்லதொரு மனையாள் அமையக் கடவது. 

No comments:

Post a Comment