Monday, January 7, 2013

புளிச்ச கொய்யா


சின்ன வயது, வீட்டுத் தோட்டம்
அதில் சிவப்பாய், அழகாய் புளிச்ச கொய்யா
அம்மாவின் எச்சரிக்கை
மகன், தின்றால் காய்ச்சல் வரும் !
அப்ப அதை யார் கேட்டா?
நல்ல புளிப்பும் இனிப்புமாய்
தின்னத்தின்ன இன்பம்,ஆனா
வரும் மறுநாள் அம்மா சொல்போல
கடுமையா காய்ச்சல்
அம்மா இருக்க அதுவும் சுகம்தான்
இப்ப அம்மாவும் போயாச்சு
புளிச்ச கொய்யாவும் மறந்தாச்சு
கவனிக்க ஆளில்லாம
காய்ச்சலையும் காணலையே ?

2 comments:


  1. சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருக்கிறான். கீழே விழுந்து காயம். விழுவதை அம்மா பார்க்கிறாள். பையன் புரண்டு புரண்டு அழுகிறான். தாயின் ஆறுதல் இதம். இதுவே , பையன் விழுகிறான்.நல்ல காயம் சுற்றும் முற்றும் பார்க்கிறான். யாரும் அவனைக் கவனிக்க வில்லை. தூசு தட்டி எழுந்து செல்கிறான். உங்கள் பதிவைப் படித்தபோது இதுதான் நினைவுக்கு வந்தது. மனித மனத்தின் இயல்பும் அழகாக வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள். கணினி அறிவு உங்களுக்கு இருப்பது தெரியும். கூகிளில் போய் tamilmanamnet போங்கள். படித்தால் விவரங்கள் தெரியும்.

    ReplyDelete
  2. வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ஐயா.....

    ReplyDelete