Saturday, March 2, 2013

ஏக்கம்




அண்ணாந்து பாத்துப் பாத்து கழுத்து வலியெடுத்துப் போச்சு.

சே, வருண பகவான் இந்த முறையும் கை விரிச்சிட்ட மாதிரி தெரியுது.

காப்பித்தண்ணி கேட்டா கெழவி வையறா.

பாவம், அவளும் என்னதான் செய்வா,

கையில, காதுல, கழுத்துலன்னு உள்ளதெல்லாம் போச்சு,

வேளாமையும் கை விட்டுருச்சி.

பெத்த புள்ளைங்களும் படிச்சு வெளியூருன்னு போய்ட்டாய்ங்க.

இனி இங்க வரவா போராய்ங்க.

இன்னைக்கிண்ணு பாத்து இந்தப் பய புள்ளய இன்னும் காணோம்,

சவரம் பண்ணி நாளாச்சு.

6 comments:

  1. யதார்த்தமான உண்மை வரிகள்...

    இந்நிலை மாற வேண்டும் என்கிற ஏக்கமும் வருகிறது...

    ReplyDelete
  2. வருகைக்கும்,பதிவுக்கும் நன்றி. ஒரு புகைப்படம்/ஓவியத்தைப் பார்த்து 50 சொற்களில் குறுங்கதை சொல்லும் ஒரு முயற்சி இது.

    ReplyDelete

  3. என் வலைப்பூவின் முகப்பில் எழுதி இருப்பதைக் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையாய் மனம் உணரும்போது கவிதை பிறக்கும். பொதுவாகப் பகிரப் படாத எதார்த்த எண்ணங்கள். வாழ்த்து. ஒரு முறை உங்களுக்கு எழுதினேன். சமையல் குறிப்புகள் தருவேன் என்று. Please visit. kamalabalu294.blogspot.in வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  4. அங்கலாய்ப்புகளில் கடைசி வரி ஜோர்...!

    ReplyDelete
  5. உங்கள் தொடர் ஊக்கம் மகிழ்ச்சியளிக்கிறது ஐயா. உங்கள் சமையல் பதிவுகளை நேரம் கிடைக்கையில் கண்டு களிக்கிறேன்.

    ReplyDelete