Wednesday, December 11, 2013

பாவம் அத்தை !


அப்பாவின் தங்கை, அப்பாவித் தங்கை

அவங்க பேரு தங்கம், உள்ளம் சொக்கத் தங்கம்

நாங்கன்னா அதுக்கு அம்புட்டு உசுரு

அறியாத வயசில அத்தைக்குக் கண்ணாலம்

ரெண்டாந்தாரமா வாய்ச்ச வயசான மாப்பிள்ளை

அஞ்சு புள்ளைங்க கொடுத்த மாமா கெளம்பிட்டாரு பரலோகம்

கஷ்டம்னாக் கஷ்டம் கஞ்சிக்கு மட்டுமல்ல

ஆனா தனியாளாப் புள்ளைகள கரையேத்தி

கடைசிவரை சுகமின்னா என்னான்னு தெரியாமலே

அத்தையும் படுக்கைல விழுந்து மாமா போலவே

40 நாள்ள மெதுவாக மேல போயிருச்சு

ஊருக்கு கௌரதையா போட்ட 4 பவுன் சங்கிலிய

பாடைல போகையில யாரோ பாவிப்பய உருவிட்டானே

அம்மாவ மறந்திட்டு புள்ளைங்க பொருளத் தேடி

வெட்டியான அவுத்துப்பாத்து, வசை பாடி, இருட்டில் தேடி

கடைசிவரை கெடைக்கலியே மருமக சங்கிலி

மண்ணுக்குப் போகும் முன்னே

பொன்னுக்கு சர்ச்சையாச்சு

பொன்னை விரும்பும் பூமியிலே

பொன்னான அத்தைக்கு எங்கய்யா மதிப்பு ?






2 comments:

  1. பாடையிலெ போகும்போது பவுன் சங்கிலியோடு அனுப்புவார்களா.?

    ReplyDelete
  2. வீட்டிலேயே கழட்டியிருக்க வேண்டியது, வழியில் கழட்டலாமென்று யாரோ கூறக்கேட்டது (அந்தக் களவாணியாயிருக்குமோ?) கடைசியில் பாதகமாக முடிந்தது.

    ReplyDelete