Thursday, February 22, 2018

யாரோ எழுதிய கவிதை !

உன்னைப் பிடிக்க காரணங்கள் தேவையில்லை, காரணங்கள் தேடிச் செல்ல நானொன்றும் கவிஞனில்லை. உன் கண்களைப் காண்கையில் புதிதாய்ப் பிறந்த குழந்தை மனதில் தோன்றும் ; உன் சிரிப்பைக் கேட்டால் சிற்றருவியின் சிலிர்ப்பு முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் ; உன் புருவங்கள் வில்லின் வளைவுகளின் காரணமோ என்று எண்ணத் தோன்றும் ; உன் கருவிழிகள் கருவண்டுகளுக்கே பொறாமையூட்டும் ; உன் உதடுகள் இருக்குமிடம் தெரியாமல் இருந்துவிட்டுப் போகும் ஈரப்பதங்கள் ; உன் மூக்கை வர்ணிக்கப் பயமாக உள்ளது, உனக்குத் தும்மல் வந்து விடுமே!;  உன் கன்னம் வெள்ளிக் கிண்ணம் ; உன் நாசி வெண்ணையை வைத்தால் வழுக்கிச் செல்லும் அவ்வளவு நேர்த்தியான வளைவு ; உன் கூந்தல் கருமேகங்களின் ஒட்டுமொத்த அணிவகுப்பு ; மொத்தத்தில் நீ ஒரு ராகமாலிகை, உன் நெஞ்சம் என் காதல் மாளிகை. 

No comments:

Post a Comment