Monday, February 25, 2013

சமையல் - ஜாலியா இருக்கு !


முதல்ல மாப்பிள்ள ஸ்ரீகாந்தனுக்கு ஒரு பெரிய நன்றி. ஏன்னா சமையல்மேல ஒரு பிடிப்பு வருவதற்கு அவன் வாங்கிக் கொடுத்த ப்ரஷர் குக்கர் ஒரு காரணம். அதுக்கு மேல அவன் சமையல் பண்ற ஸ்டைல். ரொம்ப அனுபவிச்சிப் பண்ணுவான். இங்க கத்தார் வந்த பிறகு அனேகமா ஒவ்வொரு வெள்ளியும் அவன் வீட்லதான் மதிய சாப்பாடு. இன்னொரு நண்பர் கௌரிஷங்கரும் கூட சேர்ந்து நளபாகத்தில கலக்குவாங்க. வெளியில சாப்பிட்டு, நாக்கு செத்துப் போய் இருப்பவனுக்கு வீட்டு சமையல் தேவாமிர்தமாய் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நாள்தான் இந்த குக்கர் வாங்கின நன்னாள். மறுநாள் தைரியமா சாதமும் பருப்பும் வச்சு வெள்ளோட்டம் பார்த்தேன். மனசுல கொஞ்சம் பயம், எங்கடா வெய்ட்டு பிச்சுக்கிட்டு போயுடுமோ இல்ல தண்ணி பத்தாம சாதம் கருகிப் போயிடுமோன்னெல்லாம் மனக்கிலேசம். ஒரு மாதிரி 6 விசில் வந்தோன்னே ஸ்டவ்வ நிறுத்தி, அரை மணி ஆற விட்டுத் திறந்து பாத்தப்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எந்த சேதாரமும் இல்லாம பருப்பும் சாதமும் வெந்திருந்துச்சு. என்ன சாதத்தில கொஞ்சம் தண்ணி ஜாஸ்தியாயிருந்துச்சு. பரவாயில்ல, திருஷ்டிக்குன்னு எடுத்துக்கிட்டேன். தக்காளி,வெங்காயம், பூண்டு,பச்ச மொளகா எல்லாத்தையும் வெட்டியெடுத்து அதோட சிக்கன் சாசேஜயும் சேத்து, வானலியில் எண்ணை விட்டு, அதுக்கும் கொஞ்சம் பயந்து, பின்னர் ஒரு மாதிரி சைட் டிஷ்ஷும் ரெடி பண்ணியாச்சு. என்னடா ஒரு வாசனையும் வரலியேன்னு வெள்ளேந்தியா யோசிச்சேன். (பிறகுதான் தெரியும், அது வர மசாலா ஐட்டமெல்லாம் சேக்கணுமாம்) ஏதோ அன்னைய பொழப்பு ஓடிருச்சு. மனசுல ஏகப்பட்ட குஷி. நானும் ரௌடிதான்,நானும் ரௌடிதான்னு வடிவேலு ஜெயிலுக்குப் போன கதையா, சமையல் எனக்கும் வருமில்லன்னு நிரூபிச்சாச்சு. இதெல்லாம் விடப் பெரிய தொல்ல, பண்றத அப்படியே ஊர்ல இருக்கிற சீனியர் சமையல்காரருக்கு ( பொண்டாட்டிங்க) வெளங்கப் படுத்தணும். கொஞ்சம் பில்ட் அப் கொடுத்து, மானே தேனே பொன்மானேல்லாம் போட்டுச் சொன்னாலும் ஏதாச்சும் குறை கண்டிப்பா இருக்கும் ! பரவால்ல, இப்ப நாளுக்கு நாள் எதாச்சும் புதுசு புதுசா ட்ரை பண்றேன்.

பி.கு : மீட் பால் கறி இங்க ஹிட்டாச்சு. நண்பர் ஒருவர் ரெசிப்பி கேட்டாருன்னா பாத்துக்கோங்க....!

6 comments:

 1. சிரமத்தையும் ஜாலியாக சொல்லிட்டீங்க...

  புதிய முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்...

  ReplyDelete

 2. நானும் ஓரளவுக்கு சமைப்பேன். ஏதாவது ரெசிபி வேண்டுமென்றால் சொல்லுங்கள். எழுதி அனுப்புகிறேன். of course with my wife's permission. !

  ReplyDelete
 3. நன்றி தனபாலன் சார்.

  ReplyDelete
 4. ஐயா, அனுப்புங்க,அனுப்புங்க.பண்ணிப்பாத்துட்டு சொல்றேன்.

  ReplyDelete
 5. ஜாலி சமையல் ..!பாராட்டுக்கள்..

  ReplyDelete