Thursday, February 28, 2013

ஏன் நடிகைகளைப் பிடிக்கிறது? ( நமக்கு !)+2 படிக்கும் காலங்களில் ராதா,அம்பிகா திரையுலகில்  கோலோச்சினார்கள். எந்தப் பெரிய நடிகரின் படங்களாயினும் இவர்கள்தான் நாயகிகள். ஆரம்பத்தில் ராதாமீது பிரேமம்  கொண்டு நாளாக, 
நாளாக அது மங்கிப்போய் விட்டது. ரேவதி,நதியா,அமலான்னு எல்லாரையும் பிடித்த காலம் ஒன்று.
(ஒருத்தர விட்டுட்டு இன்னொருத்தர மட்டும் விரும்பிறது ஏனோ மனசுக்கு சரியாய்ப் படல !) அவங்க சீசன் முடிஞ்சதும் குஷ்பு,மீனான்னு அரியாசனம் ஏறினாங்க. மக்களும் (நானும் அதில அடக்கம்) எத்தனை நாயகிகள் வந்தாலும் எல்லோருக்கும் ஆதரவ வாரி,வாரி வழங்கினாங்க. அப்புறம் சிம்ரன், கொடியிடையக் காட்டி தமிழகத்தையே (ஆந்திரா,கர்னாடகம் உட்பட) தனது கொசுவத்தில சொருகிக்கிட்டாங்க. ஜோதிகா, ஸ்னேகான்னு குடும்பக் குத்துவிளக்குகளும் (விளம்பரப்படங்களில் செம சில்லறை) நமிதா,மும்தாஜ், மாளவிகா போன்ற கவர்ச்சி வெடி(குண்டு)களும் அவரவர் ரேஞ்சுக்குத் தக்கமாதிரி விரும்பப்பட்டார்கள். (ஆனா, வெளியுலகத்துக்கு இப்படி அரையும் குறையுமா திரியிறாளுகன்னு (பொய்) சமுதாய நோக்கு வேறு) 

அடுத்த அலை த்ரிஷா,நயன்தாரா,அசின் ரூபத்தில் வர, ரசிகர்களுக்கு ஆனந்தக் கொண்டாட்டம் ! இது இப்ப தமன்னா,அனுஷ்கா,அமலா பால்னு சமந்தாவில வந்து நிக்குது. ஆனா, இதுவும் கடந்து போகும். சரி, தலைப்புக்கு வருவோம். நமக்கு ஏன் நடிகைகளைப் பிடிக்கிறது? ஒண்ணப் பாத்தோன்னே பிடிக்கணும்னு ஒண்ணும் கட்டாயமில்ல. பாக்கப்பாக்கப் புடிக்கும். இந்த ஃபார்முலாதான் இங்க வொர்க் அவுட் ஆவுது. 

எந்தப் பத்திரிக்கையப் பாத்தாலும் இந்தப் பொண்ணுங்கதான் தென்படுது. அதிலவேற நம்ம சமுதாய அமைப்பு ஆணையும் பெண்ணையும் பிரிச்சே வக்கிறதனால இதுகமேல ஒரு ஈடுபாடு தன்னாலயே வந்திடுது. ஒருத்தனுக்குப் புடிச்சது இன்னொருவனுக்குப் புடிக்கணும்னு ஒண்ணும் அவசியமே இல்ல. அதனால அவனவன் டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி ஒண்ண மனசுல பதிச்சிக்கிறானுங்க. கல்யாணம்,காட்சி எல்லாமே இப்ப இருபதுகளின் கடைசியில் அல்லது முப்பதுகளின் ஆரம்பத்தில் வருவதால், அதுவரை இந்த நடிகைகள்தான் கனவில் ஆடி,ஓடி,டூயட் பாடி பாச்சுலர் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறார்கள். (விதிவிலக்குகள் கண்டிப்பா உண்டு) 

கல்யாணம் முடிஞ்சு நமக்கின்னு ஒருத்தி வந்தபின்னர் இந்தப் பிரேமை குறைய வாய்ப்புண்டு. ஆனாலும் பழைய நினைவுகள் மனதில் நிறைந்திருக்கும். சிலருக்கு கனவுகளில் தொடரும், (தொந்தியைத் தூக்கிக்கொண்டு, மூச்சு வாங்கி ஆடிப்பாடுவதுபோல் யாருக்கும் கனவு வருவதுண்டா?) 

எனக்குத் தெரிஞ்சவங்க வீட்டுல சரோஜாதேவி பாட்டுப் போகையில அந்த வூட்டுக்காரர் வச்ச கண் வாங்காம அவங்களையே முழுங்கிற மாதிரிப் பார்க்கிரதையும், அந்த வெறுப்ப அவர் வூட்டம்மா சமையல் பாத்திரங்கள்கிட்ட காட்டுறதையும் பல முறை பாத்திருக்கேன். ஆக, இது பல தல முறை கண்ட நமது பண்பாடுபோல.


பின்குறிப்பு :
ரேவதிப்பிரியன்னு ஒருத்தர். நடிகை ரேவதியோட ரசிகரா இருப்பாருன்னு நெனைக்கிறேன். ரேவதிக்கு கல்யாணம் நடந்தப்ப எங்க ரூம் போட்டு, எத்தன நாள் அழுதாருன்னு யாருக்காச்சும் தெரியுமா? இல்ல அந்தப் பேருக்காகவே அதே பேருள்ள வேற பொண்ணத் தேடிப் புடிச்சுக் கட்டிக்கிட்டாரான்னும் தெரியல. ஒரு வேள அவர் பொண்டாட்டி பேரு வேற ஏதுமா இருந்திருந்தா கண்டிப்பா அந்தம்மா இந்தப் பேர மாத்தச் சொல்லி அழுது,அடம் பண்ணியிருக்கும். ஆமா, உண்மையிலேயே பொண்டாட்டி பேரப்போட்டு பின்னாடி பிரியன்னு சேத்துக்கிட்ட யாராச்சும் இருக்காங்களா?
4 comments:

 1. நல்ல கேட்டீங்களே ஒரு கேள்வி... கடைசியிலே...!

  ReplyDelete
 2. வருகைக்கும் பதிவுக்கும் நன்றி, ஏன் 3 மாசமா ஒரு பதிவையும் காணோம்?

  ReplyDelete

 3. இதுக்கெல்லாம் மனோதத்துவக் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்லப் போனால் பெரும்பாலானவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். வேண்டாமே.!

  ReplyDelete
 4. மனோ(வின்) தத்துவங்களா இல்லை மனோதத்துவமா ஐயா? தெரிஞ்சுக்க ஆசை, எழுதுங்களேன்....

  ReplyDelete