Sunday, February 3, 2013

சுமை


                        
எட்டுப் பொண்ணுங்க, எட்டும்பொண்ணுங்க
பையன் வரம்வேண்டி எங்காத்தா, சுத்தாத கோவில் இல்ல.
பாவி அவ, அந்த சாமி கண்ணு தெரக்கலியே.
இடுப்புல ஒண்ணு,வயத்துல ஒண்ணு,தூளில ஒண்ணு,
துணியில்லாம ஒண்ணுன்னு வீடெல்லாம் பொண்ணுங்க.
அப்பனுக்கு ஓயாத வயல் வேல, உழுவதற்கு
பகலில வயக்காடு, இரவுல என்னப் பெத்த ஆத்தா.
சொந்தத்தில மாமனும், மச்சினனும், டைவரும், டெய்லரும்
ஒவ்வொண்ணாக் கரயேத்தியும் மிஞ்சுனது
பெரியவ நான் கிருஷ்ணவேணி,
சின்னவ ஜோதி.

** ஓவியத்தில் உள்ள சகோதரிகளுக்கும் இக்கதைக்கும்  எந்தவொரு சம்பந்தமுமில்லை


3 comments:

  1. முதலில் இந்த verification தேவையை நீக்குங்கள். கருத்து இடுவதற்கு அது disincentive ஆக இருக்கிறது. இதுவரை இராண்டு மூன்று முறைகள் வந்து போய் விட்டேன்.
    இந்த குறுங்கதை நல்ல முயற்சி. குறுக்கிச் சொல்ல வேண்டியதன் காரணம் என்ன. ஃபோட்டோ மாதிரித் தெரியும் இது போன்ற ஓவியம் ஒன்றை நானும் ஒருமுறைப் பதிவிட்டிருக்கிறேன். இன்னும் தமிழ் மணத்தில் இணைக்க வில்லையா.?வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நானும் என்னென்னமோ செய்து பார்க்கிறேன். verification தொந்தரவை நீக்கத் தெரியவில்லை. தமிழ்மணம்,திரட்டி இணைப்பும் சரி வர மாட்டேன் என்கிறது. சில நேரங்களில் கணிணிமேல் கடுப்பாய் இருக்கிறது.

      குறுங்கதை எழுதக் காரணம், இது T 20 யுகமல்லவா?

      Delete
    2. ஐயா, வணக்கம், verification தேவையை நீக்கி விட்டேன்....

      Delete