Sunday, February 10, 2013

சமையல் குறிப்பு


சாசேஜ் முட்டை தொக்சு


எப்படிச் செய்வது?

முதல்ல முட்டைய எடுத்து நல்லா கழுவிக்கோங்க.ஏன்னா அது எந்த வழியா வருதுன்னு 

தெரியுமில்ல. அடுத்து சாசேஜ ஃப்ரீசரிலிருந்து எடுத்து ஆற விடுங்க. மாமன்,மச்சான்,தாய் 

மாமன்,பங்காளி இல்லாமக் கல்யாணமா? என்ன முழிக்கிறீங்க, அதுதாங்க 

தக்காளி,வெங்காயம், பச்ச மொளகா, பூண்டு ஐட்டங்களை எடுத்து ஒழுங்கு மரியாதையா 

கழுவி,அளவா வெட்டிக்கோங்க. கண்ணு கலங்கும்,அழுக அழுகையா வரும். பழைய 

சிவாஜி படத்தில வரும் சோகக் காட்சிய மனசுல கொண்டாங்க. டைமிங்க் சூப்பரா 

இருக்கும். இப்ப முட்டைய ஒடச்சு ஊத்தி, (தரையில இல்லீங்க பயங்கரமா வாட அடிக்கும்) 

அளவா உப்பு, மிளகுத்தூள் (இதுக்கு கிராம் கணக்கெல்லாம் தெரியாது, கண் பாக்கிறத கை 

செய்யணும் அவ்வளவுதான்) சேர்த்து நல்லா பீட் பண்ணிக்கோங்க. இஷ்ட தெய்வத்த 

மனசுல நெனச்சுக்கிட்டு, இப்ப ஸ்டவ்வ பத்த வச்சு கடாய அதில வையுங்க. எண்ண 

கொஞ்சம் சேருங்க. (சுத்தமான கடலெண்ணதானே?) கடுகு கொஞ்சம் காட்டுங்க, மூட் 

அவுட்டான பொண்ணுமாதிரி சீறும். பயப்புடாதீங்க. இப்ப நம்ம ஐட்டங்கள, அதாங்க சொந்த 

பந்தங்கள உள்ள தள்ளுங்க. கொஞ்சம் தண்ணி (ஐயோ, நீங்க தப்பாவே யோசிக்கிறீங்க, 

இது அதில்ல) காட்டலாம். மொளகாப்பொடி,உப்பு மேல சொன்ன மாதிரி சேத்துக்கங்க. 

மசாலாத்தூள் சேத்தா கொஞ்சம் வாசனை வரும். ரொம்ப பொங்க வச்சிராதீங்க, வேற 

வாசனை வந்திரும். (ஃபயர் சர்வீஸ் காரய்ங்க வந்திடப்போறாங்க.) இப்ப அந்த முட்டை 

மிக்ஸ கலந்து கிண்டுங்க. 2 நிமஷத்துல சாசேஜ் முட்டை கொத்சு தயார்.


பின் குறிப்பு : 

இதை உங்களுடன் வேலை பார்க்கும் நண்பர்களுக்குக் கொடுத்து ட்ரையல் பாக்கலாம். 

முக்கியமா ஒண்ண மறந்திடாதீங்க. இத செஞ்சது உங்க வூட்டுக்காரம்மான்னு 

சொல்லிடுங்க. எல்லாரும் நல்லாருக்குன்னு கண்டிப்பாத் தலையாட்டிடுவாங்க !

2 comments:


  1. முட்டைகூட சாப்பிடாத ப்யூர் வெஜிடேரியன் நானுங்க. இதை என் மகனுக்குச் சொல்லிக் கொடுத்து சமைக்கச் சொல்ல வேண்டும். .உங்களால் சாப்பிட முடிந்தால் அதுவே ஓக்கேதானே.

    ReplyDelete
  2. இது நல்லா இருக்கே... (எழுத்து நடையும்)

    Followers ஆகி விட்டேன்...

    ReplyDelete