Thursday, November 2, 2017

பசியின் தாக்கம்



பசியென்னும் ஜந்துக்குக் கண்கள் உண்டா?
எல்லாம் இருப்பவனுக்குப் பசி உணர்வு அபூர்வம்
வறுமையில் தவிப்பவனுக்கோ அதுவே நிரந்தரம்
என்னே ஒரு விசித்திரப் போக்கு இந்தப் பசிக்கு?
செல்வர்கள் பசிக்க நடை பழக பூங்கா மத்தியில்
ஏழைகள் பசியைப் போக்க நெடுஞ்சாலை ஓரத்தில்
என்னதான் நடக்கிறது இந்தப் பரந்த உலகத்தில்?
பாவம் இந்தப் பையன், வேலைக்குப் போன அம்மா
வருவாளா மாட்டாளான்னு வீதியிலே வைத்த கண்ணு
உங்க மனசைக் கொஞ்சமும் கலங்க வைக்கல்லியா?
அவன் பசியாறவாச்சும் அவன் அம்மா சீக்கிரம் வரணும்
வயிறாற அவனுக்கு சுடு சோறும் கறியும் தரணும்
அதைத் தின்னுட்டு அவன் பாயில படுத்து 
அப்படியே தூங்கிடணும்
எனக்கு மட்டும்தான் இதெல்லாம் தோணுதா?
நீங்க கண்ணைத் தொடைச்சிட்டு தலையாட்டுவது 
எனக்கு தெரியுது……


-          பசியின் தாக்கம் - தோஹா - 10 மே 2017

2 comments:

  1. பசியின் தாக்கம் அனுபவித்தவனுக்குத் தான் தெரியும்

    ReplyDelete
  2. பசி பல பாடங்களைக் கற்றுத் தரும்.

    ReplyDelete