Thursday, November 2, 2017

தாய்மனம்

சூடான இட்லி, கூடவே நாலு
வகை சட்னி, தேவைப்பட்டா பொடி
சரோஜாம்மா கடையில் எப்பவுமே
கூட்டம், வியாபாரம் ஜரூர்
தனியாளா எல்லாத்தையும் சமாளிக்கும்
பண விஷயத்துல ரொம்பத் தாராளம்
சாப்பிட்டுட்டு கடன் சொல்லி
தலையச் சொறிஞ்சா சரி, போன்னு
சொல்லிட்டு வேலையப் பார்க்கும்
அதுல குடுக்காம டிமிக்கி குடுத்து
ஓசில தின்னுட்டு ஓடுவனுங்க எத்தினியோ
ஆள் நடமாட்டம் கம்மியான வேளையில
இதை ஒரு நாள் கேட்கப் போக
திருவிழாவில தொலைஞ்சு போன
ஐந்து வயசுப் புள்ளையப் பத்தி
சொல்லி ஆயாசப்பட்டுச்சு.
அது என் புள்ளைக்குப் போட்டதா
நான் நெனச்சுக்கிறேன்னு சொல்லிட்டு

இட்லி இறக்கப் போயிடிச்சு.

- தாய்மனம் - தோஹா - 27 செப் 2017

2 comments:

  1. எல்லோரையும் தன்மகனென்று நினைக்கும் தாயுள்ளம்

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா, இது சில ஆண்களிடமும் உள்ள பண்பு.

      Delete