Thursday, November 9, 2017

நாடற்றோர்


ஆரம்ப தொழில் - கொழும்பில் இந்தியாக்காரன் 
சொந்தம் - துறையூரில் சென்னைக்காரன்
சுற்றம் - சென்னையில் தஞ்சைக்காரன்
மேற்படிப்பு -  - தஞ்சையில் இலங்கைக்காரன்
ஆரம்பக் கல்வி - கண்டியில் மலைநாட்டான்
மணவாழ்க்கை - மலைநாட்டில் கொழும்புக்காரன்
புலம்பெயர்வு - இந்தியாவில் கத்தார்க்காரன்
பணிசார் வதிவிடம் - கத்தாரில் ஸ்ரீலங்காக்காரன்
போகுமிடமெல்லாம்  அந்நியமாய்
ஒதுங்க இடமின்றி, கூனிக் குறுகி
சகதியாய் அகதியாய் நிர்க்கதியாய்
நின்று நெகிழ்ந்து அரை நூற்றாண்டு கடந்து
எதிலுமே பட்டும் படாத ஒரு ஜென் நிலை
இதற்குத்தான் தாமரை இலையில்
தண்ணீர் என்ற சொலவடை!


-          நாடற்றோர் – தோஹா – 2 நவம்பர் 2017

2 comments:

  1. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை உர்ஜிதப்படுத்துகிறீர்கள்

    ReplyDelete
  2. அவர் சொல்லிட்டுப் போய்ட்டாரு, நடைமுறையில் இது ரொம்பவும் சிக்கலான அமைப்பு.

    ReplyDelete