Thursday, November 2, 2017

சாயங்காலச் சந்தியாராகம்

எனக்குத் தெரியும் ; உனக்கு என்னை அவ்வளவாகப் பிடிக்காது.
எனக்குக் கழுத்தை நீட்டவும் உனக்குப் பின்னால் இருந்த மூன்று தங்கைகளே காரணம்.
மணவாழ்க்கையில் ஆரம்பம்  முதலே கருத்து ஒவ்வாமை.
ஒரு வருடத்தில் முதல் குழந்தை, ஐந்து வருடத்தில் மற்றொன்று.
மணமுறிவைத் தவிர்க்க அந்தப் பிஞ்சுகளின் வளர்ச்சி மிகப்பெரிய நிவாரணி
பள்ளி செல்லவும் அதன்பின் கல்லூரி செல்லவும் நம் உழைப்பும் நேரமும் போச்சு.
ஒருவர் பின் ஒருவராக அவரவர் வாழ்க்கையைப் பார்த்துப் பிரிய
கடைசியில் மிஞ்சியது உனக்கு நானும் எனக்கு நீயும் மட்டுமே
என் மனதில் உனக்கு எவ்வளவு பிரியமென்று நான் சொல்லி நீ கேட்டதில்லை
அதற்கான சந்தர்ப்பங்களையும் உன் இளமையும் அழகும் என்றும் தந்ததில்லை
இன்றோ உடல் தளர்ந்த அந்திமக் காலம் நம்மை உற்றுப் பார்க்கையில்
ஒன்றை மட்டும் சொல்ல விழைவேன்
இறுதி மூச்சு வரையில் உன்னை என் கண்போலக் காப்பேன்
நம்பு கண்மணியே!


-          சாயங்காலச் சந்தியாராகம் – தோஹா – 30 ஏப்ரல் 2017


2 comments:

  1. உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு வார்த்தை வடிவம் அவசியம் இல்லவிட்டால் அவை வெறுமே சருகாகிப்போகும்

    ReplyDelete