Sunday, September 24, 2017

வாழ்வின் விசனங்கள்


முகங்களைப் பார்க்க ஆவல், ஆனால் யாருக்கும் முகத்திரையைக் களைய எண்ணம் இல்லை. பாலியல் காலத்துப் பால் வடியும் முகங்களை எதிர்பார்த்த எனக்கு எதிர்ப்படுவதென்னவோ நடுத்தர வயதுடைய இறுக்கமான மனிதர்களே!  வாழ்வில் பலவற்றைப் பெற்றும், சிலவற்றை இழந்தும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு இலக்கை அடைந்திருக்கிறோம். அதனால் சமூகத்தில் போற்றப்படுகிறோம், ரகசியமாய் மனதுக்குள் தூற்றவும் படுகிறோம்! மனதில் விகழ்ப்பமில்லாமல் பழக எத்தனிக்கும் எளிய மனிதர்களை நேரம் இல்லையென்ற பொய்யான வார்த்தையால் மிகச்சுலபமாகக் கடந்துவிடுகிறோம். எல்லாருமே பொன்னும் பொருளும் ஈட்டும் போட்டியால் நேரங்களைத் தொலைத்து கொண்டிருக்கிறோம். கடைசியில் உடல் சோர்ந்து ஓய்வுக்கு ஏங்கும் வேளைகளில் இன்று யார் நலனுக்காக இரவு பகல் பாராது அயராது உழைக்கிறோமோ, அவர்கள் ரெக்கை முளைத்து வெகுதூரம் சென்றிருப்பார்கள். காலத்தைப் போற்றுவோம். மனிதநேயம் பேணுவோம்.


- வாழ்வின் விசனங்கள் – தோஹா – 30 ஏப்ரல் 2017

2 comments:

  1. ஏதிர்பார்பற்ற பொறுப்புகள் சுகமாகுமே!

    ReplyDelete
    Replies
    1. சுமையின் அழுத்தமே சுகத்தை முடிவு செய்யும்!

      Delete