Thursday, November 2, 2017

பாதையோரப் பரிதாபங்கள்

கோவில் வாசலில் பூ விக்கும்
பலரில் கமலாவும் ஒருவர்
தினமும் காலையில் கோவிலுக்குப்
போவோர் இவரிடம் பூ வாங்காமல்
போவது அபூர்வம்
பூ மட்டுமில்லாமல் 
பேச்சும் கேட்க மலர்ச்சியாய்
இருப்பதே காரணம்
எப்பவும் ஒரு புன் சிரிப்பு
முகத்தில் தங்கியிருக்கும்

ஆனால் இன்று ஏனோ
அவ்வளவு சுரத்தில்லை
ஏன் என்று கேட்டேன்
ஒண்ணுமில்லப்பா  வீட்டுக்காரருக்கு
சுகம் பத்தல்லன்னு சொன்னாங்க
பொழைக்கிறது கஷ்டம்னு
டாக்டர் சொல்லிட்டாராம்
                                                                                                        
கண்ணு பாவம் கலங்கிடுச்சு
எவ்வளவோ பூ மாலை கட்டி
அந்தச் சாமிக்குக் குடுத்திருக்கேன்
இப்ப அது கண்டுக்காம இருக்கேன்னு
பரிதாபமாப் பார்த்துச்சு
எனக்கு என்ன சொல்றதுன்னு
தெரியல்ல, புரியல
மெய்யாலுமே சாமி இருக்கா?


-          பாதையோரப் பரிதாபங்கள் – தோஹா  - 25 செப் 2017

2 comments:

  1. சாமிக்கு மாலை கொடுத்தால் கண் திறந்து பார்க்கும் என்னும் நம்பிக்கையை என்ன சொல்ல

    ReplyDelete
  2. சிலருக்கு அதுவே அசைக்க முடியாத நம்பிக்கை!

    ReplyDelete