Sunday, September 24, 2017

பாலைநிலப் புலம்பல்கள்

ஒட்டகமே !
எந்தன் பிரியமான பெட்டகமே!
இந்தப் பாலை நிலத்துல
உன்னைப் போல வேற யாரு?
தண்ணியே குடிக்காம
பல மைல் தூரம் போவியாமே?
உனக்குத் தாகமே எடுக்காதா ராஜா?
குடிக்கிற தண்ணியெல்லாம் உன்
முதுகுத் திமில்ல சேமிப்பியாமே?
தாகத்துக்கு அதுதான் கை குடுக்குமோ?
எங்களுக்கும் அப்படித்தான்.
ஊர்ல நடந்த நல்ல விஷயங்கள்
மனசுல சேமிப்பாய் இருக்கு,
எப்பெல்லாம் மனசு சோர்வாகுதோ\
அப்பெல்லாம் அதைத்தான் நெனைச்சு
மனசை ஆற வுட்டுக்குவோம்.
பிறப்பால வேறாயிருந்தும்
நமக்குள்ள எவ்வளவு ஒற்றுமை?


-          பாலைநிலப் புலம்பல்கள் – தோஹா – 18 செப் 2017 

2 comments:

  1. பாலையில் இருந்தாலும் மகிழ்ச்சியோடு இருப்பதாக அல்லவா நினைத்திருந்தேன்

    ReplyDelete
  2. இயந்திர வாழ்க்கை மகிழ்ச்சி தராது, சலிப்பையே தருகிறது ஐயா.

    ReplyDelete