Sunday, September 24, 2017

வேடிக்கை மனிதர்கள்

கல்தேரா கல்தேரான்னு (ரெண்டு பேரில்ல, ஒருத்தர்தான்!) ஒரு ஆளு. சும்மா பார்க்க அந்த வாட்ச் கட்டுன அய்யா மாதிரியான தோற்றம். வேலை என்னமோ சூப்பர்வைசர்தான். குடுத்த வேலைய முடிக்கிறாரோ இல்லையோ தினமும் மாலை தண்ணி சாப்பிடாமக் கெளம்ப மாட்டாரு.
காங்கிரீட் முடிந்த மாலை வேளைகளில் நாங்கள் அனைவரும் தாக சாந்திக்காக அருகில் இருக்கும் பாரில் ஒதுங்குவது வழக்கம். ஆனந்தம் மேலிட்டால் மேசையில் தட்டிக் கொண்டு பாடுவார், சமயங்களில் ஆட்டமும் உண்டு. போதை கட்டுக் கடங்காமல் போனால் எப்படியாவது ஒரு ஆட்டோவில் அவரை இட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவது வழக்கம். மனைவியிடம் எவ்வளவு ‘வாங்கினாலும்’ மறு நாள் பணிக்கு வர அவர் தவறுவதேயில்லை. வீடு வாசல் தோட்டம் துரவு என்று நல்ல வசதியுடன் இருந்தாலும் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் வேலை செய்வதாகக் கதை அடிப்பார். உண்மைக் காரணம் வீட்டில் சுதந்திரமாகத் தண்ணிப் பாவனைக்குத் தடா. ஒரு நாள் நண்பர்கள் ஒரு பயணம் சென்று வந்த போது இவரை வீட்டருகே இறக்கி விடுகையில் ஒரு முழு பாட்டில் சாராயம் வண்டியிலிருந்து உருண்டோடித் தரையில் விழுந்து உடைந்தது. அன்று வெகு நேரம் அதனருகில் அமர்ந்து மனிதன் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார். துணைக்கு அவர் ஆசையாய் வளர்த்த நாயும் ஊளையிட்டதாம்!


-          வேடிக்கை மனிதர்கள் – தோஹா – 23 ஏப்ரல் 2017

No comments:

Post a Comment