Sunday, September 24, 2017

இயந்திர வாழ்க்கை

வளைகுடா வாழ்க்கையில் வெள்ளி விடுமுறை வரமும் சாபமும் சேர்ந்த ஒரு கலவை. காலைச் சிற்றுண்டிக்காக அருகிலுள்ள பிரபல உணவகத்திற்கு வருகை. உணவை மட்டும் சுவைக்காமல் சுற்றுப்புறம் பக்கமும் பார்வை செல்கிறது. 

முழுதும் மூடி மறைத்த பருத்த வெளுத்த அம்மையார், இறுக்கமான முகத்துடன் கணவர், முத்தாய் மூன்று குழந்தைகள்; சிரிப்பென்பதை அறிந்திடாத வயோதிபத்தை எட்டிப் பிடிக்கும் ரிச் மேன்; என்ன தின்கிறோம், எதுக்குத் தின்கிறோம் என்று கொஞ்சமும் சட்டை செய்யாமல் ஃபோனையே நோண்டிக் கொண்டிருக்கும் வாலிபன் ; மிதமிஞ்சிய அரிதாரத்தில் வந்தும் தன்னை யாரும் சீண்டவில்லையே என்ற எரிச்சலில் சத்தமாகப் பேசிடும் வடக்கத்தி ஆன்டி (கூடவே அப்புராணி அங்கிள்); பூரி மசாலாவை கரண்டியால் உண்ணத் தடுமாறும் பிலிப்பினோ ஜோடி; வயசுக்குச் சம்பந்தமில்லாமல் முக்கால் பேன்ட், கட் பனியனில் சீனியர் சிட்டிசன். இவர்கள் மத்தியில் பொங்கல், வடை கைகளால் துவம்சம் பண்ணும் நான் நிச்சயம் வேற்றுக்கிரகவாசியே.


-          இயந்திர வாழ்க்கை – தோஹா – 28 ஆப்ரல் 2017

No comments:

Post a Comment