Sunday, September 24, 2017

பொய் முகங்கள்


சோகங்கள் தினமும் நெஞ்சோடு இருந்தும் சிரிக்க மறக்காத      முகம்

வெளியில் சிரித்து உள்ளே அழுதிடும் விளங்காத புதிரான          முகம்

சொல்ல நினைப்பதை சொல்லாமல் உள்ளே பரிதவித்த               முகம்

படித்தது பிடிக்காமல் பிடித்ததைப் படித்து மனமகிழ்ந்த               முகம்

கவலைகள் புரியாத கனவுகள் கலையாத களங்கள் அறியாத       முகம்

கையில் காசில்லா பசியின் நிரந்தரப் பிடியில் அல்லலுற்ற            முகம்

உப்பிட்டவரை உள்ளளவும் எண்ணி வியந்து புகழ்ந்த                  முகம்\

காலத்தால் ரணமாகிப் போயினும் அரிதாரத்தால் மிளிறும்           முகம்\

அணிந்திட்ட முகமூடிகள் எதுவென்று தெரியாமல் திணறும்     முகம்\

அவற்றைக் களையாமல் வெறுமனே பாசாங்கு செய்திடும்         முகம்\

எளியோரை எள்ளி நகையாடி ஏகத்துக்கும் எகத்தாளமிடும்        முகம்

பணம் தேடுதலில் பாதியிலேயே மனிதத்தை உதறிவிட்ட           முகம்

இதிலெல்லாம் சொல்லாமல் விட்ட எத்தனை கோடி                     முகம்



-          பொய்முகங்கள்  – தோஹா –  16 ஏப்ரல் 2017



No comments:

Post a Comment