Sunday, September 24, 2017

விவசாயிகளின் கண்ணீர்

முனுசாமி.
அப்பனும் ஆத்தாளும் ஆலமரம், அரசமரம்னு சுத்தி தவமாய்ப் பெத்த புள்ள.
செல்வச் செழிப்பில்லாட்டியும் சோத்துக்குப் பஞ்சமில்லாத பால்யம்.
காவிரிக் கரையில என்றைக்கும் பசுமையான வயல்வெளிதான் இவன் பாடம் படிச்ச பூமி.
ஆத்துல தண்ணி கொஞ்சங் கொஞ்சமாக் கொறைஞ்ச மாதிரியே வயல்வெளியும் சுருங்கிடிச்சி.
கூட இருந்த பய புள்ளைங்க வித்துப் போட்டு டவுனுக்குப்போய்ட்டாய்ங்க.
புள்ளைங்க படிப்புக்கு எல்லாத்தையும் வித்து இப்ப மிஞ்சுனது இந்த சொச்ச மண்ணுதான்.
மழையும் காலை வாரிடுச்சு. மானியமும் புட்டுக்கிச்சு.
மந்திரிக்கும் கவுன்சிலருக்கும் ஆத்துல தண்ணி வரப்படாது, அதுக்கு முந்தி அத்தனை மணலையும் வித்துடனும்.
கடன் கொடுத்த பேங்க் ஆபீசரு ஆளு வச்சு மிரட்டுறாரு. அவரு பிரச்சின அவருக்கு, பாவம்.
இதையெல்லாம் தாங்க மனசுலயும் தெம்பில்ல, உடம்பிலயும் உரமில்ல.
 ………. இறந்த போன விவசாயிகள் பேர்ப் பட்டியலில் இவர் பேரும் இருந்திச்சா?


-          விவசாயிகளின் கண்ணீர்  - தோஹா – 2 ஏப்ரல் 2017

No comments:

Post a Comment