Sunday, September 24, 2017

இயலாமையின் பரிதவிப்புகள்

எப்ப அந்த வண்டி வரும்?
எத்தன பேருக்கு இன்னிக்கு வேலை இருக்கும்?
வேலைக்கு கூலி ஒழுங்காக் கெடைக்குமா?
கெடைச்சாலும் அதை அந்த மேஸ்திரிப் பய முழுசாக் குடுப்பானா?
கெடைக்கிறதில அரிசி வாங்கிறதா, பருப்பு வாங்கிறதா?
பேரனுங்களுக்கு இனிப்பு வாங்க ஏதும் மிஞ்சுமா?
இனிப்பு கொடுத்தா ரெண்டும் அடிச்சுக்காம தின்னுமா?
அந்தச் சண்டைக்கும் மருமக நம்மளைத்தான் திட்டுவாளா?
மிஞ்சுற அஞ்சு பத்த முந்தானையில முடிஞ்சு வச்சா பத்திரமா இருக்குமா?
அதையும் பயபுள்ள லவட்டிக்கிட்டு நம்பர்க் கடைக்குள்ள பூந்திருவானா?
மக வயித்துப் பேத்தி முழுகாம இருக்காளா?
எங்கிட்ட ஒன்ணுமே இல்லேன்னு மக ஒரு தகவலும் சொல்லாம இருக்காளா?
ராக்காயி, செங்கமலம், பூங்கோதை போனமாதிரி நானும் விரசாப் போயிடுவேனா?
.
.
எப்ப அந்த வண்டி வரும்?


-          இயலாமையின் பரிதவிப்புகள் – தோஹா – 20 ஏப்ரல் 2017

No comments:

Post a Comment