Sunday, September 24, 2017

தினசரி அலம்பல்கள்

பசிக்கும் போது கிடைப்பதில்லை
கிடைக்கும்போது பசிப்பதில்லை
ருசித்துப் புசிவதில் பசியின் எல்லை
எங்கெங்கோ சஞ்சரிக்கும்
புசித்தபின் பசித்தவன் புலன்கள் அடங்க
பள்ளி கொண்டால் பேரானந்தம்
இன்று புசிப்பது பசிக்காக அன்றில்
ருசிக்காக அல்ல என்றாகி
வீட்டில் கிடைக்காததை வெளியில் தின்று
வீட்டில் உண்ணாததை வெளியாள் தின்று
இனங்காணா நோய்கள் எத்தனையோ
பிறழ்வுகள் பிரளயங்கள்
கடைசியில் விரக்தியால் விபரீதங்கள்
வீட்டில் உண்பீர்! வெளியில் வேண்டாம்!!
மனம் உடல் வளம் பெறும்!

         

-          தினசரி அலம்பல்கள் – தோஹா – 19 செப் 2017

 


2 comments:

  1. என்ன ஆயிற்று வலைத்தளத்தை மறந்திருந்த நீங்கள் ஒரேயடியாக ஆதங்கப் பதிவுகளாகவே வெளியிடுகிறீர்களே

    ReplyDelete
  2. சமயம் கிடைக்கும்போது எழுதியது, பல நண்பர்கள் ஆக்கங்களைப் பார்வையிட விருப்பம் தெரிவித்தமையால் ஒட்டுமொத்தமாய்ப் பதிவிட்டேன் ஐயா.

    ReplyDelete