Sunday, September 24, 2017

குறும்புக்காரப் பசங்க

ரமேஷ், சுரேஷ் அண்ணன் தம்பி.
படிப்பில ரெண்டு பேருமே படு சுட்டி.
லீவு நாள்ள வெளிய கெளம்புனா இந்த வானம் முழுக்க மண்டையிலதான்.
அப்படியொரு விளையாட்டு.
வீட்டுல நுழைஞ்சோன்னே சண்ட தொடங்குனா மறுநாள் வரைக்கும் முடியாம நடக்கும்.
அம்மா மெரட்டிப் பார்த்தா, பாட்டி கெஞ்சிப் பார்த்தா, அத்த கிள்ளிப் பார்த்தா
எதுக்குமே நிக்காத சண்ட ஓய்ஞ்சது அப்பா சைக்கிள் சத்தம் கேட்டுத்தான்.
அதுக்குக் காரணம் கோவம் வந்தாக் கண்ணு மண்ணு தெரியாமப் போட்டு அடிப்பதில் அவருக்கு நிகர் அவரே.
ரெண்டு நாள் வெளியூர் பயணம் போறேன்னு நேத்துக் கெளம்பிப் போனாரு.
இவனுங்க ஆரம்பிச்சிட்டாய்ங்க.
பொறுக்க முடியாம வெளிய விட்டு அம்மாக்காரி கதவைச் சாத்திட்டா.
எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தானுங்க.
மூடுன கதவு மூடுனதுதான்.
இப்ப சூரியனும் உச்சிக்கு வந்தாச்சு.
பசி வரப் பத்தும் பறந்து போச்சு.
சண்டையும்தான்.


-          குறும்புக்காரப் பசங்க  - தோஹா – 6 ஏப்ரல் 2017

2 comments:

  1. அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவுவதில்லை என்பது சரியோ

    ReplyDelete