Thursday, March 17, 2016

தாம்பரம் டு பீச் - 2

இரண்டு        தாம்பரம் சானடோரியம்    

08 : 10                                                                                   

கிச்சா தன் வெள்ளைப் பிரம்பை முன்னால் நீட்டி பழக்கப்பட்ட அந்த ரயில் பெட்டியினுள் நுழைந்தார்.

உள்ளே நுழைந்தவுடன் வழக்கமாகக் கேட்கும் உற்சாகக் குரல் கேட்காமல் போகவே,

      ‘சலாம் பாய்’

என்று குரல் கொடுத்தார்.

தன் நினைவுகளில் மூழ்கியிருந்த நசீர் வாப்பா திடுக்கிட்டு, சகஜ நிலையடைந்தார்.

      ‘வணக்கம் கிச்சாண்ணே, வாங்க இந்தாண்ட’

நண்பரின் குரல் கேட்ட திசை நோக்கி நகர்ந்த கிச்சா,

      ‘என்ன பாய், ஏதோ யோசனையாய் இருந்தீகளோ?’

என்றபடி, அவர் அருகில் சென்று அமர்ந்தார்.

நசீர் வாப்பாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இரண்டு கண்ணிலும் பார்வை பறிபோய் இருந்தாலும் ஒருவரின் மனதை எவ்வளவு துல்லியமாகக் கணிக்கிறார் என எண்ணியபடி,

      ‘தினமும்தான் யோசனை, நீங்க எப்படியீருக்கீங்க?’

      ‘எனக்கென்ன, என் தலைவன் பாட்டப் பாடி என் சோகத்தை போக்கிக்கிறேன்’

சொன்னதோடு,

      ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா, நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா’

கிச்சா எனும் கிட்டினமூர்த்தி ஒரு விபத்தில் பார்வை இழந்தவர். இவர் மனைவி இறந்தபின் பிள்ளைகளைத் தொந்தரவு செய்யாமல் அருகிலுள்ள அனாதைக் காப்பகத்தில் காலத்தைக் கடத்துகிறார்.

ரயிலில் பாடிக் கிடைக்கும் வருவாயை முழுவதுமாக அந்த அனாதைச் சிறுவர்களுக்கு செலவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

பார்வையைப் பறித்த இறைவன் அற்புதமான குரலைக் கொடுத்திருந்தான்.

மனதில் எவ்வளவு சோகம் இருந்தாலும் புரட்சித் தலைவரின் பாடல்களை உற்சாகமாகப் பாடி எல்லோரையும் மகிழ்விப்பார்.

நசீர் வாப்பாவுக்கும் மனசு சற்று லேசானமாதிரி இருந்தது.

ரயில் வேகமெடுத்தது.



(தொடரும்)

No comments:

Post a Comment