Tuesday, March 1, 2016

என் படைப்புக்கள் - இனி வருவன

நண்பர்களே

மூன்று கதைகளையும் படித்திருப்பீர்கள். பின்னூட்டங்கள் இட முடியாத ஒரு இயந்திர வாழ்க்கைச் சுழலில் சிக்கித் தவிப்பதை நான் நன்கு அறிவேன். (ஐயா ஜி.எம்.பி மட்டும் இதற்கு விதிவிலக்கு). கதைகளைப் படிக்க எங்களுக்கு நேரமில்லை என்னும் சிலரின் கூற்றுக்களுக்கு என் பதில் ஒரு புன்னகை. சிலருக்குத் தமிழ் படிக்க மறந்து போயிருக்கலாம்,  அலுவல்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே பேசி,எழுதி முடிக்கப்படும் யுகத்தில் இது ஓரளவு ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதுதான். ஆனால், தமிழும் தகராறு, ஆங்கிலமும் அரைகுறை என்ற நிலையிலேயே பலர் உள்ளது கண்கூடு. அதற்கும் என் பதில் ஒரு புன்னகையே. தமிழ் நமக்கு அவமானமல்ல, அதுவே நமது அடையாளம். எது எப்படியோ, என் கதைகளைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்யும் சீரிய பணியை நான் விடுவதாக இல்லை! 

305 என்னும் கதை காவல்துறையில் உள்ள ஒருவரைச் சுற்றி நிகழும் சம்பவங்களைப் பற்றியது. அந்தத் துறையில் உள்ளவர்களை மேலதிகாரிகள் பெயர் சொல்லி அழைக்காமல் ஒரு இலக்கத்தைக் கூறியே விளிப்பர். இதில் பலரது பெயர்கள் என்னவென்றே தெரியாது போவது சோகம். விக்கிரவாண்டி என்பது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது பேரூந்துகள் சற்றே ஓய்வெடுத்துத் தமது களைப்பைத் தீர்த்துக் கொள்ளும் ஒரு ஊர். நெடுபயணத்தில் ஒரு வயோதிக மாதுவின் அனுபவங்கள் இதன் கதைக்களம். தாம்பரம் டு பீச், ரயில் வண்டியில் பயணிக்கும் பலதரப்பட்ட மக்களும், அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்களும் அடங்கிய தொடர். 

இம்மூன்று தொடர்களுடன் இம்மாதம் முழுவதும் உங்களைத் தினமும் சந்திப்பேன். அளித்துவரும் ஆதரவைத் தொடருமாறு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

No comments:

Post a Comment