Sunday, February 7, 2016

தந்திரவியூகம் - 1

அத்தியாயம் - ஒன்று

சுந்தர் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தான்.

இருக்காதா பின்னே, எந்த முன்னறிவிப்புமின்றி  ஊரிலிருந்து கந்தசாமி கிளம்பி வந்திருந்தான்.

காலை 6 மணிக்கு செல்லுக்கு ஒரு மிஸ்ட்டு கால்.

பார்த்தா இவன்.

என்னவாயிருக்கும் என்று எடுத்தா,

மச்சி, உன் ரூம் வாசல்ல நிக்கிறேன்டான்னு குண்டைத் தூக்கிப் போட்டான்.

அதற்குப் பின்னர் வருவோம். முதலில் சுந்தரப் பத்திப் பார்ப்போம்.

4 பேர் தங்கியிருக்கும் 14 x 12 அறை.

எல்லாப்பயலும் .டி எஞ்ஜினியர்னு ஊர்ல பீலாவுட்டுட்டு இங்க நாய்ப்பாடு பட்டுக்கிட்டிருந்தாய்ங்க.

2 பேரு ( ஜோசப், பாலன்) காலை 3 மணிக்குத்தான் ஷிஃப்ட் முடிஞ்சு வந்து தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

ஒருத்தன் ( செந்தில்) டாய்லட்டுல. அவனுக்கு 7 மணிக்கு வண்டி வரும்.

இவனுக்கு இன்னைக்கு ஆஃப்.

அதனால கொஞ்சம் தூங்கலாம்னு பார்த்தா…..

கந்தசாமி  இவனுக்கு  உயிர்த்தோழன்.

சமயத்தில்  உயிரையும்  எடுப்பான்.

ஒண்ணாங்கிளாசிலருந்து  பள்ளியிறுதிவரை  ரொம்ப  நெருக்கம்.

அப்புறம் அவன் கலைக்கல்லூரியில் சேர  இவனை  எஞ்ஜினியர்  ஆகுடான்னு தண்ணிதெளிச்சி விட்டுட்டாங்க.

அந்த 4 வருஷம்  வெளியூர்ல  படிப்பு  முடிஞ்சு  வேலைக்காக காத்திருக்கும் தருவாயில் மீண்டும் ஊரில் சந்திப்பு.

கந்தசாமிக்கு தமிழார்வம் ரொம்ப ஜாஸ்தி.

படிச்ச படிப்பும் தமிழ் இலக்கியம்.

ஏதாச்சும் காலேஜுல வேலைக்குப் போன்னு அவன் வயசான அம்மா சொல்லிச்,சொல்லிக் களைத்துப் போனாள்.

அவனுக்கு தமிழ்த் திரையுலகில் நுழையும் கனவு.

அடுத்த வைரமுத்து  நான்தான்  என்ற ரீதியில் இருக்கும் அவன் பேச்சு.

அத்தனை அலப்பறையையும் சகித்துக்கொண்ட ஒரே ஜீவன் நம்ம சுந்தர் மட்டும்தான்.

அந்த நம்பிக்கைதான் கந்தனை சென்னை நோக்கி உந்தித்தள்ளியது.

எப்படியாச்சும் சினிமாவில பாட்டு எழுதிப் பெரிய அளவுக்கு வருவேன்டா

வந்தது முதல் 10 வாட்டி இதையே சொல்லிவிட்டான்.

சுந்தருக்கு இவனை எப்படி இங்கே தங்க வைப்பது என்ற யோசனை.

மத்தவனுங்க ஒத்துக்கணுமே என்ற பயம்.

செந்தில் ஒரு மார்க்கமாப் பாத்திட்டு போய்ட்டான்.

மத்த ரெண்டு பேரும் எழும்ப இன்னும் 3 மணி நேரம் ஆவும்.

வேற எங்கயாச்சும் தங்க வைக்கலாமுன்னா மாசக் கடைசி வேற.

சரி சமாளிப்போமுன்னு நெனச்சு எழுந்தான்.

மச்சான், முதல்ல பல் தேய்ச்சு,முகம் கழுவிக்க. டிபன் சாப்பிடப் போலாம்

½ மணியில் அருகிலுள்ள அட்சரபவனில் இருந்தார்கள்.

சுந்தருக்கு தொலைபேசி அழைப்பு.

மறுமுனையில் ஃபாத்திமா.

வெளியே வெய்யில் சுள்ளென்று அடித்தது.


………………………………………………(தொடரும்)

2 comments:

  1. கதாபாத்திரங்கள் அறிமுகம் முடிந்ததா. ஃபாத்திமா நண்பியா காதலியா? தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து படியுங்கள், தோழியா, காதலியா என்று புரியும் ஐயா. வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ஐயா.

      Delete