Sunday, February 7, 2016

தொடர்கதைகள் - என் படைப்புகள்

எனக்கு எழுத ஆர்வம் அப்பப்ப வரும். ஆனா எழுதியதைப் படிச்சு அதில் உள்ள குறை, நிறைகளைச் சுட்டிக்காட்டி, த(கு)ட்டிக் கொடுக்கும் நண்பர்கள் மிகவும் குறைவு. என் பொழுதுபோக்கே புத்தகம் படிப்பதுதான் என்று வெளியில் தம்பட்டமடிக்கும் நட்புக்கள்கூட மேலோட்டமாகக்கூட நான் எழுதும் கதைகளைப் படிக்க மாட்டார்கள். நண்பன் சத்யா மட்டுமே 'நல்லா எழுதுற. தொடர்ந்து எழுது' அப்படியென்று ஊக்கப்படுத்துவான். இப்ப அவனும் ஒண்ணும் சொல்றதில்ல. வேலைப்பளுவும், வாழ்க்கையின் இன்ன பிற கடமைகளும் அவன் பொழுதுகளை ஆக்கிரமித்திருப்பதால் அவனுக்கும் இதற்கு நேரம் கிடக்காமல் போயிருக்கும். இந்த வலைப்பூவில் உள்ள நட்பு வட்டம் நம் படைப்புக்களை அங்கீகரிக்குமா என்ற ஐயம் என் மனதில் எழுந்தது. அங்கீகரிக்காவிட்டாலும் தவறுகளையாவது சுட்டிக்காட்டினால் அது எழுத்தை இன்னும் சிறப்பாக்கும் என்பது அந்த ஐயத்தைக் களைய வைத்தது. முகநூலிலும், ட்விட்டரிலும் ஏற்படுத்திக் கொண்ட நட்புக்களில் ஒரு சிலராவது இந்த வலைப்பூப் பக்கம் வரலாம். பின்னூட்டங்களை இடலாம். படைப்புக்கள் நன்றாயிருக்கும் பட்சத்தில் தமது நண்பர்களுக்கும் பரிந்துரைக்கலாம். அப்படியாக நானும் பிரபலமடையலாம். (சும்மா, தமாசு!) இன்று முதல் நான் எழுதிய 'தந்திரவியூகம்' எனும் தொடர் 6 நாட்கள் வெளியாகும். அதைத் தொடர்ந்து இன்னும் சில கதைகளும் வெளியாகும் ( தலைப்புக்கள் சஸ்பென்ஸ், திருடி சினிமாவுக்கு டைட்டிலா வைக்காம இருக்கத்தான்!). அனைவரும் வாரீர், ஆதரவு தாரீர் !

2 comments:

  1. கதைகள் எழுதுவது நல்ல விஷயம் தான் இந்த வலை உலகில் பதிவு நீண்டுபோனாலேயே படிக்கத் தயங்குவார்கள் அதுவும் தொடர்கதை என்றால் கடந்த பதிவுகளையும் நினைவில் வைத்துக் கொள்வது இப்போதெல்லாம் சொல்வது போல் சான்ஸே இல்லை. இருந்தாலும் நான் வருவேன் தொடர்ந்து படிப்பேன் உத்தரவாதம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உங்கள் நீடித்த ஆதரவுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete