Tuesday, February 16, 2016

கொல், ஆனால் சொல்லாதே! - 2

அத்தியாயம் - இரண்டு

உள்ளே இருந்து பாட்டுச் சத்தம் கேட்டது.


அம்மா கத்தினாள்,

ஏண்டி, உள்ள போனமா சோலிய முடிச்சமான்னு இல்லாம என்னாடி பாட்டு வேண்டிக் கெடக்கு? சீக்கிரமா வெளிய வாடி!’

கிருஷ்ணவேணி சலிச்சுக் கொண்டாள்.

வீட்டில் நிம்மதியாய் இருக்கும் ஒரே இடம் இந்தக் குளியலறை மட்டும்தான். அதுவும் இந்த ஜென்மத்துக்குப் பொறுக்காதே....’

அவள் வெளியேற இன்னும் 10 நிமிடம் ஆனது.

அவள் குடும்பம் ஆண் துணை இல்லாதது. அப்பா குடியாய் குடிச்சு ஈரல் கருகி இறந்த போது இவளுக்கு 7 வயது. தங்கை ஜோதிக்கு 3. அது நடந்து 13 வருஷம் ஆச்சு. தங்களுக்கு சினிமா தியேட்டர் பெயர்களை வைத்தது தவிர உருப்படியாய் அப்பா எதையும் பண்ணவில்லை. அம்மா தனி ஆளாய் பத்து பாத்திரம் தேய்த்து, பலகாரம் சுட்டு வித்து இவர்களைப் பாதுகாக்க பெரும் பாடு பட வேண்டியிருந்தது.

படிப்பு பெருசா வரல்ல, பார்க்க பளிச்சுனு இருந்ததால செல் ஃபோன் கம்பனி ஓனர் வீட்டுல வேலை கெடச்சுது.

அங்கதான் பழனி பரிச்சயமானான். எதிர் வீட்டில் டிரைவர் வேலை. பார்க்க வெள்ளை பான்ட் சர்ட்டில் ஹீரோ மாதிரித் தெரிந்தான். தன் செல்லில் படு ஸ்டைலாகப் பேசிக்கொண்டே இவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.

வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒருமித்துப் பறந்தன

வேணி காதல் வயப்பட்டாள்.

பழனிக்கு சீக்கிரம் காரியத்த முடிச்சிட்டு கை கழுவி விட அவசரம்.

நைசா பேசி, உஷார் பண்ண நினைக்கையில் உள்ளேயிருந்து முதலாளி பொண்ணு கால் பண்ணிச்சு.

சரி,இதை வந்து பார்த்துக்கலாம்னு உள்ளே போனான். போகும்போது செல் ஃபோனை (சைலன்ட் மோடில்) அவளிடம் கொடுத்து

வச்சுக்க புள்ள, இப்ப வந்திர்ரேன்

என்று கையை லேசாக அழுத்தி விட்டுப் போனான்.

வேணிக்கு தலை கிர்ரென்று சுற்றத் தொடங்கியது.

போனவன் ரொம்ப நேரமாக வரவேயில்லை. இவளும் அதனை வீட்டுக்கு கொண்டு போய் விட்டாள்.

பாவம் வரப்போகும் ஆபத்து என்னவென்று அறியாமலே வேலைக்குக் கிளம்பினாள்.

வந்தது


(தொடரும்)

No comments:

Post a Comment