Monday, February 8, 2016

தந்திரவியூகம் - 2

அத்தியாயம் - இரண்டு

சுந்தர் குரல் அவ்வளவு இனிமையாக ஒலித்து அவன் இதுவரை கேட்டதில்லை.

பேசி முடித்துவிட்டு இவனைப் பார்த்தான்.

இவன் முகத்தில் இருந்த கேள்வியைப் புரிந்துகொண்டு பேசத்தொடங்கினான்.

மாப்பிள்ள, அது ஃபாத்திமாடா, எங்கூட வேல பாக்கிற பொண்ணு

இந்தப் பதில் திருப்தியளிக்கவில்லை என்று தெரிந்து தொடர்ந்தான்.

தினம்,தினம் மணிக்கணக்கா பேசுற அளவுக்கு நெருக்கம்

ஆறி அவலாகிப்போயிருந்த காப்பியை ஒரே மடக்கில் குடித்தான்.

இவளத்தான் நான் கட்டிக்கப்போறேன்……...!'

கந்தன் அதிர்ந்து போனான்.

டேய், உங்க வீட்ல தெரிஞ்சா நீ செத்தடா மவனே !’

இப்ப தெரிய வேணாம். எல்லாம் மெதுவா சொல்லிக்கலாம்

கந்தனுக்கு கவலை பற்றிக்கொண்டது.

ஆமா, இப்ப என்ன பண்ணுறதா உத்தேசம்?’

கந்தன் சுயநினைவுக்கு வந்தான்.

சினிமா டைரக்டர், இசைஅமைப்பாளர், தயாரிப்பாளர்னு தேடிப்போய் வாய்ப்பு கேட்கணும்

எத்தனை வருஷத்துக்கு?’

என்னடா சொல்ற?’

இங்க பாரு மச்சான், நான் சொல்றேன்னு தப்ப எடுத்துக்காத. சென்னை ஒரு ஜனசமுத்திரம். இங்க சினிமா கனவுகளோட வந்து தொலஞ்சு போறவங்கதான் ஜாஸ்தி

ஆனா என் திறமைமேல எனக்கு நம்பிக்கை இருக்குடா

இங்க வர்ற எல்லாருமே ஏதோ ஒரு திறமையோடதான்டா வர்றாங்க. யதார்த்தத்த புரிஞ்சிக்கோ மாப்பிள்ள

கந்தன் முகம் வாடிவிட்டது. சுந்தருக்கும் தான் அப்படிப் போட்டு உடைத்திருக்கக் கூடாதோ என்று தோன்றியது.

சரி,சரி, மனச தளர விடாத. என் ரூம்மேட்டுங்களோட வேண்ணா பேசிப்பார்ப்போம்….’

இருவரும் எழுந்து ரூமுக்குப் போனார்கள்.

இதற்கிடையில் ஃபாத்திமாவிடமிருந்து மீண்டும் அழைப்புவர சுந்தர் இவ்வுலகை மறந்தான்.

1/4 மணிநேரம் களித்து, இருவரும் மீண்டும் ரூமில்.

உறங்கிக்கொண்டிருந்தவர்களிடம் எந்த அசைவும் இல்லை.

சுந்தர் தன் மடிக்கணினியை எடுத்து அதில் முகநூலில் நுழைந்தான்.

கந்தனுக்கு பயண அலுப்பு, மெதுவாக ஒரு ஓரமாகச் சாய்ந்தான்.

ஆளரவம் கேட்டுத் திடுக்கென்று கண்விழித்தான்.

,மாப்பிள்ள இதுதான் ஜோசப்,இது பாலன்.எல்லாம் .டி பசங்க.’

இருவரும் ஹாய் சொன்னார்கள்.

இவன் என் பால்யசினேகிதன் கந்தசாமி. பெரிய கவிஞன். சினிமால வாய்ப்புத்தேடி வந்திருக்கான்

இருவரும் ஆளமாகப் பார்த்தார்கள்.

உங்களுக்குத்தான் சினிஃபீல்டுல பழக்கம் இருக்கே,கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கப்பா….'

இருவரும் சத்தமாகச் சிரித்தார்கள்.

கந்தனுக்கு என்ன நடக்குதுன்னே புரியல.

பின்னர் மெதுவாக, தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேசியது பாலன்.

எனக்குத்தெரிஞ்ச டைரக்டர் எல்லாம் குறும்படம் எடுப்பவர்கள். அதில பெருசா பாட்டெல்லாம் வராது

கந்தன் முகம் சோகமானது. அவன் தொடர்ந்தான்.

ஆனா அவங்களுக்கு சில இசைக்கலைஞர்கள் தொடர்பு இருக்கு. நான் வேணா பேசிட்டு சொல்றேன்……..’

இதுக்கு என்ன ரியாக்ஷன் கொடுப்பதென கந்தனுக்குத் தெரியவில்லை.

இப்ப ஜோசப் பேசினான். குரல் கணீரென சும்மா யேசுதாஸ்போல ஒலித்தது.

இப்பல்லாம் மெட்டுக்கு பாட்டு எழுதறவங்கதான் ஜாஸ்தி. போடுற ட்யூனுக்கு பாட்டெழுதினாத்தான் நிலைக்க முடியும்

இந்தப் பதில் (குரலும்தான்) கந்தனுக்கு திருப்தியளித்தது.

ஜோசப்பைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தான்.

வெளியே மழை பெய்யத்தொடங்கியது.


………………………………………………(தொடரும்)


6 comments:

  1. Nanba, un ezhuthu nadai pramadam.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முகமற்ற நண்பரே, உங்களைப் போன்றவர்களைப் பற்றியும் ஒரு கதை உள்ளது. தலைப்பு 'அனானிமஸ்' !

      Delete
  2. Nanba, un ezhuthu nadai pramadam.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா, நீதானா அது?

      Delete
  3. நண்பன் ஒருவர் சினிமாவில் நுழையும் ஆசையுடன் நல்ல வாய்ப்புகளை நழுவவிட்ட உங்களது ஏதோ ஒரு பதிவு படித்தநினைவு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பதிவு நிஜம், இது நிழல். வருகைக்கு நன்றி ஐயா.

      Delete