Wednesday, February 17, 2016

கொல், ஆனால் சொல்லாதே! - 3

அத்தியாயம் - மூன்று

வந்தது மழை.

ஆறுமுகம் சலித்துக் கொண்டான். இருந்தும், காசுக்குச் சிங்கியடித்துக் கொண்டு இருந்த வேளையில் தனது மீன்பாடி வண்டிக்குக் கிடைத்த சவாரியை எண்ணி மகிழ்ந்தான். டீ குடிக்க வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

காலையில் ஸ்டாண்டில் நாலு நண்பர்களுடன் வாழ்க்கையை நொந்தபடி பேசிக் கொண்டிருந்தான். டிப் டாப்பாக ஒரு ஆசாமி வந்தான். வாடகைக்கு வண்டி வேணும்னு கேட்டான். உரக் கம்பேனிக்கு பொருள் ஏத்தற வேலை. மற்ற நால்வரும் சில,பல காரணங்களுக்காகக் கழன்று கொள்ள இவனுக்கு அமைந்தது யோகம்.

நான்தான் ஆனந்த்

வந்தவன் தன்னை அறிமுகப்படுத்தி கை குலுக்கிய விதம் ஆறுமுகத்திற்கு பிடித்திருந்தது. அவன் அணிந்திருந்த கூலிங் கிளாஸ் பிடித்திருந்தது. அவன் அருகில் நின்று பேசும்போது வீசிய மெல்லிய வாசனை பிடித்திருந்தது.

அவன் வரவேண்டிய இடத்தைச் சொல்லி விட்டு தனது யமஹாவில் ஏறி சட்டென மறைந்தான்.

ஆறுமுகம் அந்த இடத்தை அடைய 40 நிமிடங்கள் பிடித்தது. அங்கு அந்த யமஹா நின்றிருந்தது.

வாங்க ஆறுமுகம் அண்ணன், உங்களுக்காகத்தான் வெயிட்டிங்….”

சொல்லிக்கொண்டே ஆனந்த் வெளிப்பட்டான்.

ஆறுமுகம் அந்த கட்டிடத்தைப் பார்வையிட்டான். நகரின் ஒதுக்குப் புறத்தில் இப்படியொரு இடத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. இவனை அழைத்துச் சென்று பெரிய மீசைக்காரரிடம் அறிமுகம் செய்தான்.

முத்துசாமி அண்ணன், இவர்தான் ஆறுமுகம். நம்ம லோடு அடிக்க நான் ஏற்பாடு பண்ணியவர். லோடுக்கு ஆயிரம் ரூபா பேசிடுங்க. நான் உங்களை அப்புறம் பாக்கிறேன்.”

முத்துசாமி பழம் தின்னு கொட்டை போட்ட ஆசாமியாகத் தென்பட்டார். இவன் ஜாதகத்தையே பிரிச்சு மேய்ஞ்சு லோடுக்கு 100 ரூபா கம்மி பண்ணிட்டார். ஆள வுடுரா சாமியென்று கெஞ்சாத குறையாக அங்கிருந்து நகர்ந்தான். லோடுமேன்களுக்கு டீ செலவுக்கு 50 ருபா வெட்டி விட்டு அவர்கள் கொடுத்த முகவரியை கண்டு பிடித்து சரக்கை இறக்கினான்.

மூன்றாவது ட்ரிப்பில் தலையில்லாத முண்டமும் சைலன்டாக ஏற்றப்பட்டது.

தனக்குச் சுளையாகக் கிடைக்கவிருக்கும் மூவாயிரம் சொச்சத்தில் என்னென்ன செய்யலாமென ஆறுமுகம் சிந்திக்கலானான்.


ஃபோன் அடித்தது


(தொடரும்)

2 comments:

  1. கதா பாத்திரங்களை தொடர்பு படுத்திக் கொள்ள முடியவில்லை. எல்லாம் முடிந்தபின் ஒன்றாய் படிக்க வேண்டும் போல் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. இது அறிமுகப் படலம்தான், போகப் போக கதை சூடு பிடிக்கும்.

      Delete