Wednesday, March 9, 2016

த்ரீ நாட் ஃபைவ் - 10

அத்தியாயம் - பத்து


செந்திகுமாரிடமிருந்து தகவல் கிடைத்த அரை மணியில் அமைச்சர் வண்டியில் அது பயணப் பட்டிருந்தது
அமைச்சர் ஒரே குஷியில் இருந்தார்.
ஐ.ஜி. காந்தனிடமிருந்து தகவலும் தொலைந்து போன ஜீவனும் ஒருமிக்கக் கிடைக்கப்பெற்றன.
அந்தத் தகவலை உடனடியாக அவர் தனது ஆசைநாயகியிடம் பகிர்ந்திருந்தார். அவள் குரலில் மகிழ்ச்சியும் விரகமும் ஒரு சேர வழிந்தன.
இம்முறை பதவிஉயர்வுக்குக் கண்டிப்பாக காந்தனையும், ராஜநாதனையும் சிபாரிசு செய்ய வேண்டுமென்று முடிவு செய்தார்.
வண்டி மெதுவாக அவர் மனமகிழ் இல்லத்துக்குள் நுழைந்தது.
வண்டியிலிருந்து இறங்கி ‘அதனை’யும் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக லிஃப்டை நோக்கி வீறுநடை போட்டார்.
1
2
3
4
5
லிஃப்டிலிருந்து வெளியேறினார். 604ல் மணியை அழுத்தினார்.
கதவு திறந்து முதலில் ஜுஜிலிப்பாவுக்கு முத்தங்கள் பறந்தன.
கீழே குனிந்து பல்லைக் கடித்துக் கொண்டார்.
மெதுவாகக் கனைத்தார். அப்பொழுதுதான் அவரைக் கண்டதுபோல சிணுங்கல்களுடன் அவரைக் கட்டிக் கொண்டாள்.
மெதுவாக அவளை அணைத்தபடி வந்த வேலையைக் கவனிக்க படுக்கையறையை நோக்கி நகர்ந்தார்.
காலையில் எழுந்தவுடன் ஸ்வஸ்திகா தனது நண்பனைத் தேடியது. அதற்குப் பதிலாகப் புதியதொரு கரடி பொம்மையை ரேவதி கொடுத்தாள். வந்த வழியே அது ஓடி விட்டதென்று குழந்தைக்குச் சமாதானம் சொன்னாள். குழந்தையும் பிடிவாதம் பிடிக்காமல் தனது புது பொம்மையை நண்பர்களிடம் காட்ட விரைந்தது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டாள். உடனே தகவலைக் கணவனுக்குப் பரிமாறினாள்.
அந்தக் கரடி பொம்மை தன் அன்பின் வெளிப்பாடாய் காவல்துறையால் தரப்பட்டிருந்தது.
காவல் நிலையம் பரபரத்தது.
காவல்நிலைய அதிகாரி உள்ளே நுழைந்திருந்த வேளை.
யாரிடமிருந்தோ வந்திருந்த தொலைபேசி அழைப்பை மிகவும் அவதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு வழக்கம்போலக் காவலர்களை அழைத்தார்.
அர்ச்சனை தொடர்ந்தது.
எல்லோரும் தமக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளைக் கவனிக்க நாலாபக்கமும் தெறித்து ஓடினார்கள்.
        ‘305’
      ‘ஐயா’
‘நீரு பாவம்யா, கஷ்டப்பட்டு அந்த நாயப் புடிச்சுக் குடுத்த நீயிருக்க சம்பந்தமேயில்லாம யாராரோ பயனடையப்போறாங்க’
மௌனமாகச் சிரித்து காவல் நிலையச் சுவரில் எழுதியிருந்த வாசகத்தைப் பார்த்தார்.
‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’



(முற்றும்)

2 comments:

  1. எதிர்பாரமல் கண்டுபிடித்தது தானே பலனை எதிர்பார்க்காவிட்டாலும் தவறில்லை.

    ReplyDelete
  2. ஐயா, நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்துக்கு நன்றி.

    ReplyDelete